
தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளத்தில் 12.05.2023 அன்று காலை 10.00 மணி அளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவர் மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Organiser
District Employment and Career Guidance Centre - Thoothukudi
Date
12/05/2023 to 12/05/2023
Timings
10:00 AM to 02:00 PM
Location
Thoothukudi
Address
espected Madam, ASSISTANT DIRECTOR, DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, NO.232, GOVT. ITI CAMPUS, KORAMPALLAM, AYYANATAIPPU PANCHAYAT, THOOTHUKUDI - 628 101. PHONE NO. 0461-2340159 ,
,
Thoothukudi,
Landmark: Near Korampallam
,
Thoothukudi,
Landmark: Near Korampallam

S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
---|---|---|---|---|
1 | Chandramohan K | Junior Employment Officer | deo.tut.jobfair@gmail.com | 7871634598 |
2 | Anwar.K | Asst | deo.tut.jobfair@gmail.com | 9600542055 |
Job Fair - Posted Jobs
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 | ETRICALS ENGINEERS PRIVATE LIMITED | Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 20 | 15,000 - 25,000 |
2 | ETRICALS ENGINEERS PRIVATE LIMITED | Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 20 | 15,000 - 25,000 |
3 | Amazing Export Corporation | Below SSLC - Any | Tiruppur | 100 | ~15,000 |
4 | nicola educational and Research Institute | SSLC - Any | Madurai | 100 | ~15,000 |