கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகளும், கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை நாடுநர்களும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.