தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19.05.2023 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது. இம்முகாமில் உள்ளிட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Amazing Export Corporation |
SSLC - Any | Tiruppur | 100 | ~15,000 |
2 |
CuManS Pvt Ltd |
Trainee | Chennai | 100 | 15,000 - 25,000 |
3 |
nicola educational and Research Institute |
SSLC - Any | Madurai | 100 | ~15,000 |
4 |
SHRI HARI ENTERPRISES |
SSLC - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |